Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி நீதிமன்றப் படிநிலை அமைப்பு

இலங்கையின் நீதிமன்றப் படிநிலை அமைப்பு

உயர் நீதிமன்றம்

இலங்கைக் குடியரசின் மிக மேன்மையாதும் முடிவானதுமான மேனிலைப் பதிவேட்டு நீதிமன்றமாகும்.

உயர் நீதிமன்றம் பிரதம நீதியரசரையும் ஆறு பேருக்குக் குறையாத ஆனால் பத்து பேருக்கு அதிகமாகாத ஏனைய நீதிபதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தத்துவங்கள்
  • மேன்முறையீட்டு நீதிமன்றத் தத்துவம்
    மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் முதனிலை நீதிமன்றங்களின் குடியியல் மற்றும் குற்றவியல் மேன்முறையீடுகள் தொடர்பிலான இறுதியான நியாயாதிக்கம்.
  • அரசியலமைப்பு கருமங்கள் தொடர்பிலான நியாயாதிக்கம்
    அரசியலமைப்பு மற்றும் சட்டமூலங்களின் அரசியலமைப்புடனான ஒத்திசைவுத் தன்மையை ஆராய்தல்.
  • அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
    சிந்தனை செய்யும் சுதந்திரம், சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், சமத்துவத்திற்கான உரிமை, எதேச்சாரிகாரமாக கைது செய்யப் படாமைக்கான மற்றும் தரித்து வைக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை, பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்.
  • பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பிலான நியாயாதிக்கம்.
    சனாதிபதி தேர்தல், தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் சட்டத்தரணியாக ஆட்சேர்ப்பு செய்தல், தொழிலில் இருந்து இடை நிறுத்துதல் மற்றும் தொழிலில் இருந்து நீக்குதல்.

மேலே

மேன்முறையீட்டு நீதிமன்றம்

மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்றத் தலைவரையும் ஆறு பேருக்குக் குறையாத ஆனால் பதினொரு பேர்களுக்கு அதிகமாகாத வேறு நீதிபதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.

உயர் நீதிமன்றம் தவிர்ந்த மேனிலைப் பதிவேட்டு நீதிமன்றமாக அமைவது மேன்முறை யீட்டு நீதிமன்றம் ஆகும்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தத்துவங்கள்
  • மேன்முறையீட்டு நியாயாதிக்கம்
    முதனிலை நீதிமன்றங்கள் மற்றும் ஏனைய நியாயசபைகளின் மேன்முறையீட்டு நியாயாதிக்கம்.
  • தொன்னிலை மீட்பு நியாயாதிக்கம்
    சம்பவங்கள் தொடர்பான, சட்டம் பற்றிய பிழைகளைத் திருத்தியமைப்பதற்கான நியாயாதிக்கம்.
  • முதனிலை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கான நியாயாதிக்கம்.
    இங்கு வழக்கு அறிக்கைகளை வரவழைத்து சோதிக்க முடியும்.
  • நீதிமன்றங்களை அவமதித்தல் தொடர்பிலான தண்டனைகளை விதிப்பதற்கான அதிகாரம்
    8 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனையை விதிக்கலாம்.
  • றிட் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தத்துவம்
    சர்டியொராரி புறெசிடென்டோ, மென்டாமுஸ் மற்றும் வொரொன்டோ றீட் கட்டளைகளைப் பிறப்பிக்கலாம்.

மேலே

மேல்நீதிமன்றம்

முதனிலை நீதிமன்ற நியாயாதிக்கதைப் போன்றே மேன்முறையீட்டு நீதிமன்ற நியாயாதிக்கத்தை அமுலாக்குகின்ற ஒரேயொரு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் ஆகும்.

குடியியல் நியாயாதிக்கத்தைப் போன்றே குற்றவியல் நியாயாதிக்கத்தையும் அமுலாக்கி வருகின்றது.

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்

மாவட்ட நீதிமன்றங்களின் குடியியல் மேன்முறையீடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலமாக மாவட்ட நீதிமன்றங்களின் மேன்முறையீடுகள் விசாரிக்கப்படுகின்றன.

மேல் நீதிமன்றமும் மாகாண மேல் நீதிமன்றமும்

மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதவான் ஒருவரின் முன்னிலையில் அல்லது யூரர் சபையின் முன்னிலையில் மேற்கொள்ளப்படலாம். சட்டமா அதிபர்; எழுத்திலான குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்து வழக்கு விசாரிக்கப்படுகின்ற வழக்குகள் மேல் நீதிமன்றத்தினால் கருத்தூன்றிப் பார்க்கப்படும்.

வணிக மேல் நீதிமன்றம்

3 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கான நியாயாதிக்கம் உரித்தாகும் புலமைச் சொத்துகளின் கீழ் கொள்ளப்படுகின்ற வழக்குகள் தொடர்பான நியாயாதிக்கம்.

மேலே

மாவட்ட நீதிமன்றம்

தனது நியாயாதிக்க எல்லைக்குள் கருத்தூன்றிப் பார்க்க மாவட்ட நீதிமன்றத்திடம் நியாயாதிக்கம் உரித்தாகியுள்ள வழக்குகளில் அனைத்து விதமான சிவில் வருமானங்களுக்குப் பொறுப்பான வங்குறோத்து மரணசாதன வழக்குகள், விவாகப் பிணக்குகள், விவாகரத்து, வெற்றாக்குதல் பற்றிய குடும்ப நீதிமன்ற நியாதிக்கம், பேதைகள் மற்றும் சித்தசுவாதீனமற்ற ஆட்களின் நம்பிக்கைப் பொறுப்பான்மை அவர்களின் ஆதனங்களின் நம்பிக்கைப் பொறுப்பான்மை, இறுதி விருப்பாவணம் எழுதாமல் இறந்தவர்களின் முதுசம் சம்பந்தமான மரணசாதன வழக்குகள், பராயமடையாதவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஆதனங்களுக்கான நம்பிக்கைப் பொறுப்பாண்மையை வகித்தல்.

மேலே

நீதவான் நீதிமன்றம்

  • தனது நியாதிக்க பிரதேசத்தில் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பிற சட்டங் களின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நியாயாதிக்கம் உரித்தாகும்.
  • ஆரம்பகட்ட குற்றவியல் நியாயாதிக்கம்
  • திடீர் மரணங்கள் தொடர்பாக மரணவிசாரணைகளை மேற்கொள்ளல்.
  • சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்த பிடியாணை களையும், நீதிமன்றக் கட்டளைகளையும் பிறப்பித்தல்.
  • தேடுதல் எழுத்தானைகளைப் பிறப்பித்தல்.
  • நல்லொழுக்கமுடையவர்களாக இருப்பதற்காக ஆட்களை முறிகளுக்கு உட்படுத்து தலும் பொதுத்தொல்லைகளைத் தடுத்தல் சம்பந்தமாக தடைசெய்தலுக்கான நியாயாதிக்கமும்.

மேலே

முதனிலை நீதிமன்றங்கள்

  • முதனிலை நீதிமன்றங்கள் தமது நியாயாதிக்க எல்லைக்குள் குடியியல் மற்றும் குற்றவியல் நியாயாதிக்கத்தை அமுலாக்கி வருகின்றன.
  • வழக்குக்கான காரணமாக அமைந்த கடன் நட்டஈடு அல்லது உரித்தின் பெறுமதி 1500 ரூபாவை விஞ்சலாகாது.
  • முதனிலை நீதிமன்ற வழக்கு கோவைச் சட்டத்தின் 66வது பிரிவின் கீழான வழக்குகள்.
  • காணிகளில் தாக்கமேற்படுத்துகின்ற அமைதி சீர்குலைவதற்கான அச்சுறுத்தல் நிலவுகின்ற மற்றும் அமைதி குலைவதற்கு வாய்ப்புள்ள பிணக்குகளை விசாரிக்க நேரிடும்.

மேலே

நீதிச்சேவைகள் ஆணைக்குழு

பிரதம நீதியரசரை உள்ளிட்ட சனாதிபதியவர்களால் நியமிக்கப்படுகின்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரை நீதிச்சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும்.

புpரதம நீதியரசர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தவிசாளராக பதவிவழியாக நியமனம் பெறுவார்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு செயலாளரொருவர் இருப்பார். தனது செயலாளர் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எந்தவொரு ஆரம்பகட்ட நீதிமன்றத்திலும் நீதிபதியாக பதவி வகித்தல் ஆகாது.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரம்பகட்ட நீதிமன்றம் ஒன்றின் சிரேஷ்ட நீதிபதியாதல் வேண்டும்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் அலுவல்களில் தலையீடு செய்தலானது மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் யூரர் சபையொன்று இன்றி வழக்கு விசாரிக்கப்பட்டு ரூ.1,500/- அபராதமும் ஒரு வருட சிறைத்தண்டனையும் வழக்கப்படக்கூடிய தவறாகும்.

மேலே

Last Updated on Thursday, 16 June 2011 06:50